புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (19:12 IST)

மின்சாரம் தாக்கி 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

vizhupuram
விழுப்புரம் மாவட்டத்ததில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வீட்டில் 15க்கும் மேற்பட்டவர்கள் மீது மின்சாரம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சாத்தனூரில் துக்க நிகழ்ச்சிக்கு உறவினர்கள் எல்லோரும் வந்திருந்தனர்.

அப்போது தேவா என்பவரின் உடல் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸை அவரது தம்பிகள் பகவான் தொட்டு அழுதபோது திடீரென்று மின்சாரம் தாக்கியுள்ளது.

அவருக்கில் அருகில் இருந்த பெண்கள் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்  உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.