செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (08:46 IST)

நெல்லை வேட்பாளர் உள்பட அதிமுகவில் இணைந்த 15 அமமுகவினர்!

அதிமுகவுக்கு மாற்றாக இருப்பார் என்றும், அதிமுகவையும் இரட்டை இலையையும் கைப்பற்றுவார் என்றும் தினகரனை நம்பி வந்தவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர். குறிப்பாக பதவி பறிபோன 18 முன்னாள் எம்.எல்.ஏக்கள் தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதிமுகவுக்கோ அல்லது திமுகவுக்கோ செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 15 அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இவர்களில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இவர்கள் மட்டுமின்றி இன்னும் ஒருசிலர் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து வருவதாகவும், தங்கத்தமிழ்ச்செல்வன், புகழேந்தி உள்பட பல அமமுக பிரமுகர்கள் அதிமுகவுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியை எங்கள் ஸ்லீப்பர்செல்கள் கவிழ்ப்பார்கள் என்று தினகரன் ஏமாற்றி வருவது இனியும் தொடர முடியாது என்றும், விரைவில் தினகரன் கூடாரம் காலியாகும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன