செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (13:56 IST)

2018-ன் டாப் ஹீரோயின் லிஸ்ட் இதோ!

இந்த ஆணடு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகைக்கான முதல் இடத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரது நடிப்பில் நடிகையர் திலகம், சர்கார் ஆகிய படங்கள் வெளிவந்தன.
 

 
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த வருடம்  ஏழு படங்களில் நடித்திருக்கிறார்

இரண்டாவது இடத்தில் சமந்தா உள்ளார். இவரது நடிப்பில் யூ டர்ன், சீமராஜா ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியானது. கடந்த ஆண்டு ரங்கஸ்தலம் படம் காரணமாக முதல் இடத்தில் இருந்தார் சமந்தா.
 
சினிமாவில், ஹீரோயின்கள் அதிகமானப் படங்களில் நடிப்பது கடினம். சில ஹீரோயின்கள் மட்டுமே அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றனர். 
 
இந்நிலையில் இந்த 2018 ம் ஆண்டில் கீர்த்தி சுரேஷ், அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் ஏழு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள படங்கள் அக்னியாதவாசி (தெலுங்கு), தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், சீமராஜா (கெஸ்ட் ரோல்).

ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி, சாமி ஸ்கொயர், வட சென்னை, செக்க சிவந்த வானம், கனா ஆகிய ஐந்து படங்களில் நடித்துள்ளார்.
 
அடுத்ததாக நடிகை வரலட்சுமியும் ஐந்து படங்களில் நடித்துள்ளார். அவர், ’மிஸ்டர் சந்திரமவுலி’, ’எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’, சர்கார், சண்டக்கோழி 2, மாரி 2 படங்களில் நடித்திருக்கிறார்.
 
முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, சமந்தா ஆகியோர் இந்த வருடம் குறைவான படங்களிலேயே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.