1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (18:12 IST)

ஆப்பிளில் மயக்க மருந்து 40 பவுன் நகை கொள்ளை.. பெண்ணகரம் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

robbery
ஆப்பிளில் மயக்க மருந்து கொடுத்து தனியாக இருந்த மூதாட்டி இடம் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மர்ம பெண் ஒருவர் கொள்ளை அடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பெண்ணகரம் அருகே உள்ள பாப்பாரப்பட்டி என்ற பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் தனியாக இருந்தார். அப்போது அந்த வீட்டுக்கு வந்த பெண் ஒருவர்  மூதாட்டிக்கு ஆப்பிளில் மயக்கம் மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.
 
இதனை அடுத்து அந்த வீட்டிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை அள்ளிச் சென்ற அந்த பெண் காரில்  சென்று விட்டார். இதனை அடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடித்த பெண்ணை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran