புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 நவம்பர் 2021 (17:32 IST)

சாதி காரணமாக வீடு கிடைக்காத ஆசிரியர்… தினமும் 150 கிமீ பயணம்!

குஜராத்தில் ஆசிரியர் ஒருவர் அவருடைய சாதி காரணமாக வீடு கிடைக்காத கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்த்தைச் சேர்ந்த ஆசிரியர் கன்ஹையலால் பரையா. சில மாதங்களுக்கு முன்னர் இவர் நினமா என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றுதல் செய்யப்பட்டுள்ளார். இது அவரின் வீடு இருக்கும் பகுதியில் இருந்து 75 கிமீ தொலைவில் இருக்கும் கிராமம்.

இதனால் அவர் பள்ளி இருக்கும் கிராமத்துக்கு அருகிலேயே வீடு வாடகைக்கு தேடியுள்ளார். ஆனால் அவரின் சாதி காரணமாக (வால்மீகி) யாரும் அவருக்கு வீடு கொடுக்க சம்மதிக்கவில்லை. இதனால் தினமும் அவர் காலையிலும் மாலையிலும் 150 கிமீ தொலைவு பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் கன்ஹைலால் தான் ஒதுக்கப்படுவது குறித்து சமூக நீதி மற்றும் கல்வித்துறைக்கு அவர் புகார் அனுப்பினார். அதே போல அம்மாநில முதல்வர் பூபேந்திர படேலுக்கும் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த தகவலும் எடுக்கப்பட வில்லை என சொல்லப்படுகிறது.