1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:16 IST)

தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய 13 மாவட்டம் - ஆட்சியர்களுக்கு கடிதம்!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்ககியதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது. 
 
அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், வேலூர் உள்ளிட்ட 13  மாவட்டங்களில் தொய்வு அடைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் தடுப்பூசி பணிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தம் எண்ணிக்கையை 2 மடங்கு உயர்த்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.