1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (08:02 IST)

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகளுக்காக சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த நிலையில்  நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை தர இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை செய்யவுள்ளனர்.
 
Edited by Siva