இரட்டையரில் ஒருவரைக் கொன்றால் எல்லாம் கிடைக்கும் – கொலையாளியின் டைரியில் அதிர்ச்சி தகவல்கள் !

Last Modified புதன், 11 செப்டம்பர் 2019 (14:08 IST)
மும்பையில் தனது நண்பரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரைக் கொலை செய்த நபரின் டைரியின் மூலம் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மும்பையின் கொலாபா பகுதியைச் சேர்ந்த அனில் சாகுனி என்பவர் தனது நண்பர் ஒருவரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரை மாடியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்தார். இது சம்மந்தமான விசாரணையில் இயற்கையின் வலியுறுத்தலால் இது போன்று செய்ததாகக் கூறியுள்ளார்.

பின்னர் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் அவரது டைரிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரைக் கொன்றால் தனக்கு எல்லா அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று அவர் குறிப்பு எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கொலையை செய்ய அவர் பல காலமாக திட்டமிட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மனநலம் பாதித்தவரா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :