ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (13:42 IST)

12 மணி நேர வேலை மசோதா: கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றம்..!

TN assembly
தமிழக சட்டமன்றத்தில் இன்று தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை என்ற மசோதா பலத்த எதிர்ப்புகளிடையே நிறைவேற்றப்பட்டது. 
 
திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, மமக, சிபிஐ விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலை என்ற மசோதாவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 
 
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே 12 மணி நேர வேலை மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது/ இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்கள் கணேசன் ‘எந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் 12 மணி நேர வேலை என்பதை தொழிலாளர்களும் தொழில் சாலைகளும் தங்கள் இஷ்டப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்ப நிகழும் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கொண்டு வந்துவிட்டது என்பதற்காக தமிழகத்தில் கொண்டுவரவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
 
Edited by Mahendran