1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2016 (01:03 IST)

காமராஜர் உருவத்தில் 114 கிலோ ராட்சத கொழுக்கட்டை

கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே 114 கிலோவில் காமராஜர் உருவத்தில் ராட்சத கொழுக்கட்டை செய்ய உள்ளனர்.



காமராஜர் பிறந்த நாளையொட்டி காலை 11 மணிக்கு மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே 114 கிலோவில் காமராஜர் உருவில் ராட்சத கொழுக்கட்டை செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பலவகை இட்லி செய்வதில் கின்னஸ் சாதனை படைத்த இட்லி இனியவன் இந்த ராட்சத கொழுக்கட்டை தயார் செய்யும் முயற்சியை நடத்துகிறார். இவர் இதற்கு முன்பு அன்னை தெரசா, அப்துல்கலாம், தேசிய கொடிகளை இட்லி வடிவில் செய்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.