வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (15:34 IST)

15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் - சென்னையில் அதிர்ச்சி

10ம் வகுப்பு படிக்கும் மாணவியை மது, கஞ்சா போன்ற போதை வஸ்துக்களுக்கு பழக்கி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வந்த விவகாரம் சென்னையில் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே வசிக்கும் சிறுமி அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் இளைஞர்களுடன் நட்பு ரீதியில் பழகியுள்ளார். அப்போது, அந்த இளைஞர்கள் அவருக்கு மது, கஞ்சா ஆகியவற்றை கற்றுக்கொடுத்துள்ளனர். அவர் மயங்கிய நிலைக்கு செல்லும் போது அவரை கூட்டுப்பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.
 
ஒரு கட்டத்தில் அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ சோதனையில் அவருக்கு மது, கஞ்சா பழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, சிறுமியிடம் அவரின் பெற்றோர் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட வாலிபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது.
 
இதுகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் 7 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் 18 வயது நிரம்பிய வாலிபர்கள் ஆவர். இதில் இன்னும் 5 பேருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.