ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை: விரக்தியில் கடலூர் மாணவர் தற்கொலை
ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க செல்போன் வாங்கித் தருமாறு பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் தன்னுடைய பெற்றோரிடம் கேட்ட நிலையில் பெற்றோர்கள் செல்போன் வாங்கித் தராத விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி என்ற பகுதியை சேர்ந்த 15 வயது மாணவன் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத காரணங்களால் ஆன்லைனில் தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பை கவனிக்க தன்னிடம் செல்போன் இல்லை என்ற கவலை அந்த மாணவரிடம் இருந்தது. இதனை அனைத்து செல்போன் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வேலையில்லாமல் வறுமையில் இருப்பதால் இப்போதைக்கு செல்போன் வாங்க முடியாது என பெற்றோர்கள் கூறியுள்ளனர்
இதனால் விரக்தி அடைந்த அந்த மாணவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மகனின் தற்கொலை செய்தியை அறிந்த பெற்றோர் கதறி அழுத காட்சி அனைவரையும் கலங்க வைத்துள்ளது ஆன்லைன் கல்வி பயிலாதவர்களுக்கு மாற்று வழியை உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்