1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஜூலை 2020 (21:10 IST)

ஆன்லைன் வகுப்பிற்கு உதவும் வகையில் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள்: அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று வெளியான அன்லாக் 3.0 விதிமுறைகளின்படி பள்ளி கல்லூரிகள் வரும் ஆகஸ்ட் 31 வரை திறக்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது உள்ள ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு குறைந்த பட்சம் செல்போன் வேண்டும். இந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசு அம்மாநில மாணவர்களுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்க தயாராகி வருகிறது 
 
இது குறித்து அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங் கூறியபோது, ‘பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே இது குறித்து தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும், தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்ற உள்ளதாகவும் கூறியுள்ளார்