1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (12:21 IST)

பி.எப்.ஐ.அமைப்புக்கு தடை: 108 தேங்காய் உடைத்து வழிபாடு!

நாடு முழுவதும் உள்ள பி.எப்.ஐ.அமைப்பை தடை செய்ததை வரவேற்று பாரத மக்கள் கட்சியினர் கோவை 108 தேங்காய் உடைத்து வழிபாடு.


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் அடிப்படையில், இந்த அமைப்பிற்கு நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புக்களும் வரவேற்ற நிலையில், கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பாக அதன் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில், கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.

இது குறித்து ராமநாதன் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின்  இந்த அறிவிப்பை வரவேற்று. 108 தேங்காய் உடைத்து  கோவிலில் சிறப்பு வழிபாடு செய்ததாக தெரிவித்தார். இதில் அகில பாரத மக்கள் கட்சி மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா, துணை தலைவர் சேகர், மற்றும் பூசாரிகள் சங்க தலைவர் பூபதி ராஜ், வடவள்ளி மண்டல நிர்வாகிகள் வினோத் நவீன் ஸ்ரீராம் கோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Edited By: Sugapriya Prakash