வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (00:21 IST)

தினமும் ஊறுகாய் சாப்பிடுபவரா? இதை படியுங்க.

pickle
ஊறுகாய் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவாக மாறிவிட்டது. சாப்பாட்டிற்கு பொரியல் இல்லை என்றால் உடனே ஊறுகாய் வைத்து சாப்பிட்டு எழுகிறோம்.
 
ஆனால், இப்படி தினமும் ஊறுகாயை எடுத்துக்கொண்டால் பல்வேறு உடல்நல பிரச்சனை சந்திக்க நேரிடும். அவை என்னவென்பதை காண்போம்...
 
# ஊறுகாயில் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால் சுவை அதிகமாக இருந்தாலும், இது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
 
# ஊறுகாயை தொடர்ந்து சாப்பிடுவதால் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள், சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும். 
 
# ஊறுகாயில் மசாலா சேர்க்கப்படுவதால், அல்சர் பிரச்சனை ஏற்படக்கூடும். 
 
# இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 
 
# நீரிழிவு நோய் இருப்பவர்களும், ஊறுகாயை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை சந்திக்கக்கூடும்.
 
# ஊறுகாயில் உள்ள எண்ணெய் இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.
 
# ஊறுகாயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.