1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2022 (21:29 IST)

100 இடங்களில் ஃவைஃபை ஸோன்கள்: உதயநிதியின் முயற்சி!

udhayanidhi
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் ஆக்ட் பிபர்நெட் உடன் இணைந்து 100 இடங்களில் ஃவைஃபை ஸோன்கள் வைக்க திட்டமிட்டுள்ளார்.
 
இதன் முதல் பகுதியாக 20 இடங்களில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் ஃவைஃபை ஸோன்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
இணையத்தை அனைவரிடமும் கொண்டுசேர்த்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக்கிட, @ACTFibernet உடன் இணைந்து தொகுதி முழுவதும் 100 இடங்களில் ஃவைஃபை ஸோன்கள் அமைப்பதன் முதற்கட்டமாக கலைஞரின் பிறந்தநாளில் 20 இடங்களில் ‘உதய் அண்ணா இலவச ஃவைஃபை ஸோன்’களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தோம்.