வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (18:30 IST)

’நிவர்’ புயல் எதிரொலி: 25ஆம் தேதி பேருந்துகள் நிறுத்தமா?

வங்க கடலில் உருவான ’நிவர்’ புயல் தற்போது தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது இந்த புயல் வரும் 25ஆம் தேதி சென்னை மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் தமிழக அரசு மிக தீவிரமாக புயல் எச்சரிக்கை குறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடலுக்குள் சென்ற மீனவர்களை திரும்பி அழைக்க நடவடிக்கை எடுத்து வருவது, ஒருவேளை மின்சார கம்பங்கள் சாய்ந்தால் உடனடியாக அதற்கு நிவாரணம் பெறுவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது
 
மேலும் புயல் பாதிக்கப்படும் இடங்கள் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் தற்போது நிவாரண படையினர், மீட்புப் படையினர் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 25ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது பேருந்துகள் நிறுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியபோது ’நிவர்’ புயல் எதிரொலியாக பேருந்துகள் நிறுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்