திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (12:55 IST)

இன்னமும் மாஸ்க் போடல; 10 லட்சம் பேர் மீது வழக்கு! – அசால்ட்டாய் சுற்றும் மக்கள்!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முகக்கவசம் அணியாத வழக்குகளே 10 லட்சத்தை தொட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் அவசியமின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 8 முதல் முகக்கவசம் அணியாதது, தனிமனித இடைவெளி கடைபிடிக்காதது உள்ளிட்டவற்றால் 10 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. முகக்கவசம் அணியாததாக 9,96,601 வழக்குகளும், சமூக இடைவெளி பின்பற்றாததாக 36,649 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.