1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (12:54 IST)

ஞாபகம் இருக்கிறதா இந்த நடிகையா? 40 வயதில் வெளியிட்ட புகைப்படம்!

நடிகை ரியா சென் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

பாரதிராஜாவின் அட்டர் ப்ளாப் படமான தாஜ்மஹால் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரியா சென். வழக்கமாக தனது கதாநாயகிகளிடம் மிகச்சிறந்த நடிப்பை வாங்கும் பாரதிராஜா, இந்த படத்தில் அதை நிகழ்த்தவில்லை. கிராமத்து வேடத்துக்கு ரியாவின் வட இந்திய தோற்றம் சுத்தமாக பொருந்தவேயில்லை. அதுமட்டுமில்லை வாயசைவுகளும் கூட தனியாக துருத்திக் கொண்டு தெரிந்தன. அதனால் தமிழில் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் போனார். சில இந்தி படங்களில் நடித்தாலும் அங்கும் பெரிய நடிகையாக வரமுடியவில்லை.

இந்நிலையில் இப்போது ரியா சென் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 40 வயதில் தனது உச்சபட்ச கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து  ரசிகர்கள் இப்போதும் நீங்கள் கதாநாயகியாக நடிக்கலாமே எனக் கூறியுள்ளனர்.