திமுகவின் A டீம்தான் தவெக!.. எல்லாம் கள்ளக்கூட்டணி!..தெறிக்கவிட்ட அர்ஜூன் சம்பத்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியதில் இருந்து திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அதிமுகவையோ, நாம் தமிழர் கட்சியையோ, பாஜகவை அவர் பேசுவதில்லை. திமுக தனது அரசியல் எதிரி.. பாஜக தனது கொள்கை எதிரி என்று மட்டும் தொடர்ந்து சொல்லி வருகிறார். சமீபத்தில் திமுக ஒரு தீயசக்தி என்றும் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார்..
இதற்கு திமுக தரப்பு எதிர்வினை ஆற்றி வருகிறது. ஒருபக்கம் பாஜக ஆதரவாளரும் இந்து மக்கள் கட்சி தலைவருமான அர்ஜுன் சம்பத் செய்தியாளிடம் பேசிய போது திமுகவின் ஊதுகுழலாகவே விஜய் பேசுகிறார். ஏனெனில் அவர் பாஜகவை கூட விமர்சித்து பேசுவதில்லை. திமுகவும், கிறிஸ்துவ அமைப்புகளும் விஜய்க்கு எப்படி பேச வேண்டும் என சொல்லித் தருகிறார்கள்..
மக்கள் நீதி மையத்திற்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதேதான் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் ஏற்படும். 2026 தேர்தலில் விஜயின் கட்சியை மூன்று சதவீத ஓட்டுகளை மட்டுமே வாங்கும். திமுகவுக்கு எதிராக பேசி அதிமுக மற்றும் பாஜக வாக்குகளை அபகரிக்க அவர் முயல்கிறார்.
இதை பார்க்கும் போது திமுகவுடன் தவெக கள்ள கூட்டணியில் ஈடுபட்டிருப்பது புரிகிறது. ஈரோட்டில் விஜய் நடத்திய கூட்டம் தோல்விதான். திமுக ஒரு தீய சக்தி என பேச சொல்லி எழுதிக் கொடுப்பது திமுகதான். கடந்த தேர்தலில் கமல் கட்சி ஆரம்பித்தார். அவரை திமுகவுக்கு எதிராக பேச வைத்து தேர்தலை வாக்கை திசை திருப்பினார்கள். இப்போது விஜய் திமுகவின் ஏ டீமாக செயல்படுகிறார் என்று பேசியிருக்கிறார்.