ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (07:04 IST)

அரசியல் என்பது குடும்பங்களை மையமாக கொண்டு இயங்குகிறது: கார்த்தி சிதம்பரம்..!

Karthi Chidambaram
அரசியல் என்பது குடும்பங்களை மையமாக வைத்து இயங்குகிறது என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது, அவர் உதயநிதியை மறைமுகமாக குறிப்பிடுகிறாரா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நேற்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், கூட்டணி கட்சிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் கார்த்தி சிதம்பரம் தனது கருத்தை தெரிவிக்கும் போது, "ஒரு முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக நியமிக்கலாம், அது அவருக்கு உரிய முழு அதிகாரம்.

அதேபோல், அமைச்சரவை மாற்றப்படுவது ஜனநாயகத்தில் நிகழும் வாடிக்கையான நிகழ்வாகும். ஆனால் அதே நேரத்தில், இந்திய அளவில் குடும்பங்களை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, மாநில கட்சிகளாக இருந்தாலும் சரி, குடும்பங்களில் உள்ளவர்களுக்கே பதவி கொடுக்கப்படுகிறது.

மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை என்றும், தண்டனை பெற்றால் மட்டுமே ஒருவர் அமைச்சராக முடியாது என்பதால், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Edited by Siva