வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (16:34 IST)

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

Ministers
அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 4 புதிய அமைச்சர்களுக்கான  இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.
 
செந்தில்பாலாஜி, ஆர்.ராஜேந்திரன், கோவி.செழியன், ஆவடி நாசர் ஆகியோர் அமைச்சர்களாக இன்று பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோடு கூடுதலாக ஆயத்தீர்வைத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

 
கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது