செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2018 (16:46 IST)

ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு ; கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து

திருப்பூர் அருகே, தனியார் கல்லூரி வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனர்.

 
திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே செயல்பட்டு வருகிறது, கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் தினந்தோறும் மாணவர்கள் திருச்சியிலிருந்து கல்லூரி வரை பயணிக்கின்றனர்.
 
இன்றும் வழக்கம் போல கல்லூரி மாணவர்களை குன்னத்தூர் என்ற பகுதியில் ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டு இருக்கும் போது, கூலிபாளையம் என்ற பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 20க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனர்.
 
இந்த விபத்து குறித்து விசாரித்த போலீஸார், பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு எற்பட்டதால் தான் விபத்து நேர்ந்தது என கூறினர்.