1. காணொலி
  2. பகிர்வு
  3. நிகழ்வுகள்
  4. Education fees in Kanyakumari district - video by hidden camera

கல்வியின் விலை என்ன...?

கல்வி
ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி என்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள், குமரி மாவட்டத்தின் கல்விக் கொள்ளையர்கள் என்ற தலைப்பில் ஒரு காணொலித் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். இதில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. ஆகியவற்றுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதை ரகசிய கேமராவில் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்கள். கணேஷ் மூர்த்தி என்பவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை, 300 பேர்களுக்கு மேல் பகிர்ந்துள்ளார்கள்.
 
இந்தக் கட்டணங்களுக்கு முறையாக ரசீதும் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் கல்வி நிறுவனம் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுத்ததாகத் தான் ரசீது கொடுக்கப்படுகிறது. இதை அரசு கவனிக்கிறதா என்பதும் தெரியவில்லை.
 
இந்த வீடியோ, தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள பெற்றோருக்கு ஒரு கண்திறப்பாக அமையும்.

 
About Writer
Annakannan