1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. கவிதைகள்

நற்குணம்

நற்குணம் தஸ்லீமா ந‌ஸ்‌ரீன்
தஸ்லீமா ந‌ஸ்‌ரீன் கவிதைகள்

ஆங்கிலமவழிததமிழில் : சிபிசசெல்வன
நன்றி: பன்முகம் - காலாண்டிதழஏப்ரல்-ஜூன் - 2004

நற்குணம்

நீ ஒரு பெண்
அதை மறக்காமலிருப்பது நல்லது.
உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும் போது
ஆண்கள் ஜாடையாகப் பார்ப்பார்கள்.
நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து சீழ்க்கை எழுப்புவர்.
நீ தெருவை கடந்து பிரதான சாலையில் நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னை ஒழுக்கம் கெட்ட பெண் என்று திட்டுவார்கள்.
உனக்கு நற்குணமில்லையெனில்
நீ திரும்பிப் போகலாம்,
நற்குணமிருந்தால் இப்போது நீ
நடந்து கொள்வதைப் போலவே தொடர்ந்து செய்.
About Writer
Webdunia