ஃபிடல் காஸ்ட்ரோ - புரட்சியின் இடி முழக்கம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (18:56 IST)
கியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோவையே சாரும்.
 
 
சே குவேரா உள்ளிட்ட பல தென் அமெரிக்கா நாடுகளின் இடதுசாரி தலைவர்களையும் அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்பான சிஐஏ-வும் படுகொலை செய்து தனது ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக்கொண்டுள்ளது.
 

 
ஆனால், அவர்களால், எத்தனையோ சதிகளுக்கு மத்தியிலும் கியூபாவை தனது கொடிய அணு குண்டுகளாலோ, போர் பயங்கரவாதத்தாலோ அதன் நிழலைக்கூட அசைத்துக்கூட பார்க்க முடியாததற்கு ஒரே காரணம், அந்த தேசத்தின் நாயகன், மக்களின் ஆதர்ஷமாகவும், ஒரே மந்திரமாகவும் இன்றளவும் திகழ்ந்து வரும் ஃபிடல் காஸ்ட்ரோதான்.
 

 
அமெரிக்கா இதுவரையில் 634 முறை ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல செய்ய முயற்சி செய்யதுள்ளது. அவருக்கு பிடித்தமான சுருட்டு, மருந்து மாத்திரைகள், உணவுப்பொருட்கள், ஏன், அவரின் தாடியின் ரோமத்தை கொட்டவைக்கக்கூட முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களால், ஒரு ரோமத்தை உதிரவைக்க முடியவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :