1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (19:13 IST)

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் நிம்மதி உண்டாகும். 


 

 
மனஇறுக்கங்கள் நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலம், சொத்துப் பிரச்னைக்கு விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். 
 
சகோதரங்களுடன் இருந்த சச்சரவு நீங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அனுபவ அறிவு அதிகமுள்ளவர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனைகள் சில பிரச்னைகள், சிக்கல்களிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகனுக்கு தள்ளிப் போன திருமணம் நல்ல விதத்தில் முடியும். 
 
மகளுக்கு நல்ல வரன் அமையும். சுக்ரன் லாப வீட்டில் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் லாபம் வரும். வீடு, மனை வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். 
 
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். 
 
கன்னிப் பெண்களே! காதலில் தெளிவு பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் திடீர் யோகம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாகனம், கட்டிட வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சக ஊழியர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. 
 
கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தன்னடக்கத்தால் தடைகளை தாண்டும் மாதமிது. 
   
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 14
அதிஷ்ட எண்கள்: 1, 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்