1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (19:05 IST)

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். 


 

 
பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு அதிரிக்கும். வீண் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். பிரச்னைகள், போராட்டங்கள் ஓயும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர் வீட்டு கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். 
 
புதிதாக செல்போன் வாங்குவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும்-. பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆனால் முன்கோபத்துடன் பேசி சொற் குற்றம், பொருள் குற்றத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கை, கால் வலிக்கும். பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னை, தைராய்டு, யூரினரி இன்பெக்ஷன், தோலில் நமைச்சல் வந்துப் போகும். 
 
எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியிலிருந்து மனோபலம் அதிகரிக்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. வீடு, மனை வாங்குவதற்கு முன்பாகவும் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. 
 
அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். 
 
கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். தகுதிக் கேற்ப புது வேலை கிடைக்கும். வியாபாரம் தழைக்கும். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். கமிஷன், பிரிண்டிங், உணவு வகைகளால் லாபம் வரும். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். சிலர் உங்களைப் பற்றி தவறாக மூத்த அதிகாரிகளிடம் வதந்திகளை பரப்புவார்கள். அதை பொருட்படுத்த வேண்டாம். 
 
கலைத்துறையினர்களே! வருமானம் உயர வழி பிறக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 6, 8, 13
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்