1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (19:09 IST)

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படப்பாருங்கள். 


 

 
தலை வலி, சையனஸ், சளி தொந்தரவுகள் வந்துப் போகும். மறைமுக எதிர்ப்புகள், வாகனப் பழுது வந்துப் போகும். ஆனால் பிரச்னைகள் இருந்தாலும் எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கட்டிடம் கட்டத் தொடங்குவீர்கள். 
 
எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதரங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். அறிஞர்கள், ஆன்மிகவாதிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். உங்களை எல்லோரும் காரியம் ஆகும் வரை பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்த உடன் உங்களை அலட்சியப்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களை யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். 
 
அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். 
 
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். திடீரென்று அறிமுகமாவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். அலுவலக நிமித்தமாக சிலர் வெளி மாநிலம், அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். 
 
கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதறாமல் பக்குவாக செயல்பட வேண்டிய மாதமிது.      
 
அதிஷ்ட தேதிகள்: 2, 6, 7
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, பச்சை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி