திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (19:30 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்ளும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும்.

எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும்.  சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை மலரை மஹாலக்ஷ்மிக்கு அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.