செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (19:17 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் விருத்தியடையும்.  தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.  ஏற்கனவே  வரவேண்டி இருந்து  வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு, வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள்.  தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.