ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (17:35 IST)

மே 2020 - எண்ணியல் பலன்கள்: 6, 15, 24

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எதிர்காலத்தை சரியாக திட்டமிடும் 8ம் எண் அன்பர்களே, வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.

எந்த காரியத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டுவீர்கள். பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓரளவு நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள்.

வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கைத்துணை வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன்
 
பரிகாரம்: திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள். மல்லிகையை அம்மனுக்குப் படைக்கவும். மனம் போல் வாழ்க்கை இருக்கும்.