மே 2020 - எண்ணியல் பலன்கள்: 6, 15, 24

Sugapriya Prakash| Last Modified வியாழன், 30 ஏப்ரல் 2020 (17:32 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
அனைவரின் ஆலோசனையும் கேட்டாலும், தன் அறிவு கொண்டு தெளிவான முடிவெடுக்கும் ஏழம் எண் அன்பர்களே, தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள்  அலைச்சலை தரும். வியாபாரம் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். 
 
பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும். மரிக்கொழுந்தை அம்மனுக்குப் படைக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :