1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
  4. February month numerology prediction

பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 9, 18, 27

பிப்ரவரி
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எந்த ஒரு காரியத்தையும் திடமான மனதுடன் காரியங்களை செயலாற்றும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். 

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
அடுத்த கட்டுரையில்
பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்