பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 7, 16, 25

Last Modified வியாழன், 31 ஜனவரி 2019 (17:13 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எந்த முடிவு எடுக்கும் பொதும் மற்றவர்களை கலந்து கொண்டு முடிவெடுக்கும் எண்ணம் கொண்ட ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை நீங்கும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும்.

பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க கால தாமதமாகலாம். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்துறையினர் தங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். உழைப்பு வீண் போகாது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். 
 
பரிகாரம்: விநாயகரை வியாழக்கிழமை அன்று வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.


இதில் மேலும் படிக்கவும் :