பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23

Last Modified வியாழன், 31 ஜனவரி 2019 (17:09 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பசி என்று வந்தவர்களுக்கு தானம் தர்மம் அளித்து மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும்.

பெண்கள் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக நடந்து முடியும். அலைச்சல் குறையும். அரசியல்துறையினருக்கு  எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். 
 
பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சனேயரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.


இதில் மேலும் படிக்கவும் :