ஆகஸ்ட் 2020 - எண்ணியல் பலன்கள்: 9, 18, 27

Sugapriya Prakash| Last Modified வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:09 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
செவ்வாயை நாதனாக கொண்ட ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.

சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். அரசியல்வாதிகளுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
 
பரிகாரம்: காக்கைக்கு தினமும் சாதம் வைத்தல் நல்லது. தினமும் ராமர் கோவிலுக்கு சென்று வரவும். 


இதில் மேலும் படிக்கவும் :