புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:00 IST)

ஆகஸ்ட் 2020 - எண்ணியல் பலன்கள்: 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
ராகுவை நாதனாக கொண்ட நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை  சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம்.

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.

பெண்களுக்கு முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். அரசியல்வாதிகளுக்கு அனைத்தும் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும்.  மாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. 
 
பரிகாரம்: கோளறு பதிகம் படிப்பது. சிவன் கோவிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது.