1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:02 IST)

ஆகஸ்ட் 2020 - எண்ணியல் பலன்கள்: 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
புதனை நாதனாக கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு நீங்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். பெண்களுக்கு சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அரசியல்வாதிகளுக்கு மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். 
 
பரிகாரம்: ஸ்ரீதுர்க்கையை வழிபடுவது நல்லது. மது மாமிசத்தை அறவே விட வேண்டும்.