ஆகஸ்ட் 2020 - எண்ணியல் பலன்கள்: 3, 12, 21, 30

Sugapriya Prakash| Last Modified வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (09:59 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
குருவை நாதனாக கொண்ட மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். சுயகவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக நண்பர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம்  செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். 
 
பரிகாரம்: ஐயப்பனை வழிபடுவது நல்லது. பசுவிற்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :