நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

Numerology
Last Modified புதன், 31 அக்டோபர் 2018 (19:56 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எந்த நேரத்திலும் மெய்ப்பொருள் பக்கம் நிற்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிப்பீர்கள். குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு வாகன ப்ராப்தி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும்.

பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு  கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: வினாயகரை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.


இதில் மேலும் படிக்கவும் :