நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Numerology
Last Modified புதன், 31 அக்டோபர் 2018 (19:48 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:


தனது துரிதமான நடவடிக்கையினால் வெற்றி கொள்ளும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் நினைத்த காரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். சுபச்செலவு உண்டாகலாம். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் நீங்கும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பொறுப்புகள் அதிகரிக்கும். இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.

பெண்களுக்கு கருத்து வேற்றுமை நீங்கும். கலைத்துறையினருக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 3, 6, 9
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.


இதில் மேலும் படிக்கவும் :