நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

Numerology
Last Modified புதன், 31 அக்டோபர் 2018 (19:54 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:


கலைநயம் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும். வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம்.

பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். பிள்ளைகளின் செயல்களால் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 1, 6
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.


இதில் மேலும் படிக்கவும் :