நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

Numerology
Last Modified புதன், 31 அக்டோபர் 2018 (19:43 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:


எடுத்த வேலையை திருப்திகரமாக முடிக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்பம் ஒன்று நிகழும். அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களுக்கு உங்கள் மூலம் அதிக நன்மைகள் நடக்கும்.

புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 3, 6
பரிகாரம்: அம்மனுக்கு செவ்வரளி மலரை சமர்பித்து வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.


இதில் மேலும் படிக்கவும் :