நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

Numerology
Last Modified புதன், 31 அக்டோபர் 2018 (19:46 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:


தனது நேர்மையான நடவடிக்கையினால் காரியத்தை ஜெயமாக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பொருள் சேர்க்கை உண்டாகும். அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும்.

பிள்ளைகள் வழியில் நற்பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் கூடும். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: மஞ்சள், சிவப்பு
எண்கள்: 1, 3
பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.


இதில் மேலும் படிக்கவும் :