சுவையான முட்டை குழம்பு செய்ய...!!

Written By Sasikala
Updated: திங்கள், 4 மே 2020 (13:33 IST)
சின்ன வெங்காயம் - 200 கிராம் (தோலுரித்து நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 2 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 
 
முதலில் முட்டையை நீரில் போட்டு நன்கு வேகவைத்து இறக்கி, முட்டை ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
 
பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம்மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக  கிளறி விட வேண்டும். 
 
பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் முட்டையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி முட்டைக் குழம்பு தயார்.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments