செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (18:23 IST)

அசத்தும் சுவையில் இறால் பிரியாணி செய்ய !!

Prawn Briyani
தேவையான பொருட்கள்:

இறால்  - அரைகிலோ (உரித்தது)
பாஸ்மதி அரிசி -அரைகிலோ
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
வெங்காயம்- 200 கிராம்
தக்காளி -200 கிராம்
மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா (ஏலக்காய், பட்டை, கிராம்புத்தூள்) - அரை ஸ்பூன்
சோம்புத்தூள் - அரைஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மிள்காய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா - கைபிடியளவு
எலுமிச்சை-பாதி பழம்
பிரியாணி இலை - 2
உப்பு - தேவைக்கு ஏற்ப



செய்முறை:

இறாலை சுத்தம் செய்து அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு, உப்பு, முக்கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து அரைமணி நேரம் வைக்கவும்.

மசாலா கலந்து வைத்த இறாலை ஒரு பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும். பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு சிவந்ததும், இஞ்சி பூண்டு வதக்கி கரம்மசாலா, சீரகம், சோம்பு பொடி சேர்த்து வதக்கவும். வதங்கிய இஞ்சி பூண்டு கரம் மசாலா வகைகளுடன், கொத்தமல்லி புதினா, மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி, முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு சிறிது மூடி வைத்தால் தக்காளி மசிந்து எண்ணெய் மேலெழும்பி வரும்.

பிரியாணி மசாலா தயார் ஆனதும் ஊற வைத்த அரிசியை  சேர்த்து உப்பு சரிபார்க்கவும். அடுப்பை மீடியமாக வைக்கவும். பின்பு வதக்கி வைத்த இறாலை பாதி வெந்து வந்த பிரியாணி சாதத்துடன் கலந்து பிரட்டி விடவும். எலுமிச்சை பிழியவும். மூடி விடவும். சாதம் முக்கால் பதம் வெந்ததும் அடுப்பை குறைக்கவும்.

பிரியாணி பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி தம் போடவும். அடிகனமான பாத்திரமாக இருக்க வேண்டும்.15 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும். .சுவையான இறால் பிரியாணி தயார்.