1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

முட்டை கட்லெட் செய்ய...!

தேவையான பொருட்கள்:  
 
முட்டை - 4, 
கறி மசாலா தூள் - 2, ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிதளவு 
பெரிய வெங்காயம் - 1, 
பிரட் - 4 துண்டு
கார்ன் பிளார் மாவு - 1/2 ஸ்பூன்
கடலை மாவு - 2 ஸ்பூன்
செய்முறை: 
 
முதலில் முட்டைகளை வேகவைத்து பிறகு அதனை தோல் உரித்து ஒரு பவுலில் போட்டு கையால் பிசைந்து கொள்ளவும். அதனுடன் கறிமசாலா, உப்பு, கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்து  கொள்ளவும். 
பிறகு இதனை நீளவாக்கில் உருண்டையாக சின்ன, சின்ன துண்டுகளாக பிடிக்க வேண்டும். பிறகு பிரட் துண்டுகளை மிக்சியில் போட்டு, தூளாக அரைத்து அதனுடன் கார்ன் மாவு சேர்த்து வைத்து கொள்ளவும். 
 
மற்றொரு தட்டில் கடலை மாவை சிறிதளவு நீர் சேர்த்து கலந்து ஏற்கனவே பிடித்து வைத்துள்ள துண்டுகளை கடலை மாவு தட்டில் உருட்டி  எடுத்து பிறகு அதனை பிரட் தூளில் உருட்டிக் கொள்ள வேண்டும். அனைத்து தூண்டுகளையும் இவ்வாறாக தயார் செய்து வைத்து  கொள்ளவும். 
 
பிறகு ஒரு கடாயில் தயார் செய்த கட்லெட் துண்டுகள் மூழ்காத அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றி அந்த கட்லெட் துண்டுகளை போடவும். இருபுறமும் வேகும் வகையில் திருப்பி விட்டு 1 நிமிடம் வரை எண்ணெய்யில் போட்டு எடுத்தால் சுவையான முட்டை கட்லெட்  தயார்.