1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரியின்போது ஒவ்வொரு நாளும் பூஜைக்காக என்ன உணவுகளை தயாரிக்கலாம்...?

நவராத்திரி அன்று இறைவனுக்கு 9 நாட்கள் வரை படைக்கும் உணவு வகைகளை தெரிந்துகொள்வோம்.

முதல் நாள்: வெண் பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை போன்ற உணவுகளை படைப்பார்கள்.
 
இரண்டாம் நாள்: புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள்.
 
மூன்றாம் நாள்: கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
 
நான்காம் நாள்: தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல் போன்ற உணவுகளை படைத்து மகிழ்வார்கள்.
 
ஐந்தாம் நாள்: சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல் போன்ற உணவுகளை இறைவனுக்கு படைப்பார்கள்.
 
ஆறாம் நாள்: தேங்காய் சாதம், தேங்காய் பால் பாயாசம், ஒரெஞ்ச் பழம், மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள்.
 
ஏழாம் நாள்: எலுமிச்சை சாதம், பழ வகைகள், வெண் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு போன்ற உணவுகளை படைப்பார்கள்.
 
எட்டாம் நாள்: பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் போன்ற உணவுகளை படைப்பார்கள்.
 
ஒன்பதாம் நாள்: சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை போன்ற உணவுகளை படைப்பார்கள்.