1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இந்த பொருள்களுடன் இவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது ஏன்?

ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி, நமது உடலின் ஆரோகியத்தை வளப்படுத்துகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இந்த உணவுகளை, இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் நிச்சயம் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இவற்றை நாம் கடைப்பிடிப்பது நன்மையை தரும் .
 
பசலைக்கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால், அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஏனெனில் இவற்றில் உடல் உஷ்ணம் ஏற்படுத்தும் பண்பு  உள்ளது.
 
திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால், அது இறப்பை உண்டாகி விடுமாம். நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்கு துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு குடித்தால், அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் குடிக்கக் கூடாது.
 
தேன் சாப்பிட்ட பிறகு ஒயின் அல்லது இனிப்பு உணவுகளை சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகளை சந்திக்க நேரிடும்.
முருங்கை, முள்ளங்கி, மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் குடிக்கக் கூடாது. ஏனெனில் இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும் வாய்ப்புகள்  அதிகம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
 
எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடன் அல்லது அவற்றை சாப்பிட்டவுடன் பால் குடித்தால், ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். மேலும் மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் இவை உடலில் உஷ்ணம் உண்டாகும் வாய்ப்புகளை அதிகமாக்கிவிடும்.